ரூ 10.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ரெனோ டஸ்ட்டர் சேன்ட்ஸ்டார்ம் எடிசன்

ரெனோ நிறுவனம்  டஸ்ட்டர் சேன்ட்ஸ்டார்ம் எடிசன் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் RxS வேரியண்ட்டின் அடிப்படையில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 85Bhp மற்றும் 110Bhp என இரண்டு திறன்களிலும் கிடைக்கும். இதன் 85Bhp திறன் கொண்ட மாடல் ரூ 10.9 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் 110Bhp திறன் கொண்ட மாடல் ரூ 11.7 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் சேன்ட்ஸ்டார்ம் எடிசன் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

பானெட், கதவு, பின்புற கதவு மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளில் கொடுக்கப்பட்டுள்ள புதிய கிராபிக்ஸ் 
புதிய 16" இன்ச் அலாய் வீல்
புதிய கிரில் மற்றும் மேட் கருப்பு வண்ண முன்புற ஆர்மர் 
வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்ற உட்புற அலங்காரம் 
7" இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் 
மேலும் இந்த மாடல் ப்ரான்ஸ், சில்வர் மற்றும் க்ரே என மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் இரண்டு வித திறன்களில் கிடைக்கும். ஒன்று 85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றொன்று 110 bhp (5750 rpm) திறனும் 245Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் குறைந்த திறன் கொண்ட எஞ்சின் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும் அதிக திறன் கொண்ட எஞ்சின் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.