ரெனோ க்விட் இரண்டாவது ஆனிவெர்சரி சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டது

ரெனோ நிறுவனம் க்விட் மாடல் வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக க்விட் இரண்டாவது ஆனிவெர்சரி சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் நான்கு வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 15,000  அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்: 
RXL 0.8 lte MT - ரூ 3,42,800
RXT 0.8 lte MT - ரூ 3,76,400
RXL 1.0 lte MT - ரூ 3,64,400
RXT 1.0 lte MT - ரூ 3,97,900 

இந்த சிறப்பு பதிப்பு மாடலில் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ள வசதிகள்:

  1. கதவு, C-பில்லர் மற்றும் மேற்கூரையில் கொடுக்கப்பட்டுள்ள 'SportLine '  கிராபிக்ஸ்
  2. பானட்டில் கொடுக்கப்பட்டுள்ள ‘02’ எனும் கிராபிக்ஸ் 
  3. இரட்டை வண்ண பக்கவாட்டு கண்ணாடி 
  4. சிவப்பு வண்ண வீல் கவர் அல்லது வெள்ளை வண்ண வீல் கவர்
  5. ஸ்கிட் பிளேட்
  6. ‘02’ எனும் எண்ணுடன் கூடிய ‘SportLine’ இருக்கை கவர் 
  7. உட்புறம் முழுவது சிவப்பு அல்லது வெள்ளை வண்ண அலங்காரங்கள் 
  8. ‘02’ எனும் எண்ணுடன் கூடிய ஸ்டேரிங் வீல் கவர் மற்றும் தரை விரிப்பு

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் 0.8 லிட்டர் மாடல் 54 bhp  திறனையும் 72Nm  டார்க் எனும்  இழுவைத்திறனையும் மற்றும் 1.0 லிட்டர் மாடல் 67 Bhp திறனையும் 91 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த சிறப்பு பதிப்பு மாடல் AMT ஆப்ஷனில் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் ஏற்கனவே 'லிவ் பார் மோர்' எனும் சிறப்பு பதிப்புகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.