ஜப்பானில் வெளியிடப்பட்டது அடுத்த தலைமுறை சுசூகி ஸ்விப்ட்

சுசூகி நிறுவனம் ஜப்பானில் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலை வெளியிட்டது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கப்படும். மற்ற நாடுகளுக்கான அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடல் 2017 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும். இந்த மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாடல் SHVS  எனும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது.

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள், புதிய இரட்டை புகை போக்கி என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட்  சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலை முறை ஸ்விப்ட் மாடல்  அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.