புத்தம் புதிய சைபர்டிரக் எலெக்ட்ரிக் யுடிலிட்டி டிரக் மாடலை வெளிப்படுத்தியுள்ளது டெஸ்லா

உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் சைபர்டிரக் எனும் எலெக்ட்ரிக் யுடிலிட்டி டிரக் மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் விற்பனை 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்பதிவு தற்போதே தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் டாப் ஸ்பெக் வேரியன்ட் 2022 ஆம் ஆண்டு தான் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

டெஸ்லா சைபர்டிரக் மாடலின் வடிவமைப்பை ரொம்பவும் வித்தியாசமாக ஹாலிவுட் சயின்ஸ் பிக்சன் படங்களில் வரும் கார்களை வடிவமைத்துள்ளது டெஸ்லா நிறுவனம். இந்த மாடலில் 6.5 அடிநீளம் கொண்ட பொருள் வைக்கும் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 1,588kg எடை வரை உள்ள பொருள்கள் வைக்க முடியும். இந்த மாடலில் தரை இடைவெளியை மாற்றிக்கொள்ள முடியும், அதிகபட்சம் 400mm வரை அதிகரிக்க முடியும். இந்த மாடல் ஆறு இருக்கை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் Single Motor RWD, Dual Motor AWD மற்றும் Tri Motor AWD என மூன்று வித பவர்ட்ரைன் தேர்வுகளில் கிடைக்கும். இதன் Single Motor RWD வேரியன்ட் 400Km ரேஞ்சும் 6.5 வினாடிகளில் 96Km வேகத்தை கடக்கும் வல்லமையும், Dual Motor AWD வேரியன்ட் 500Km ரேஞ்சும் 4.5 வினாடிகளில் 96Km வேகத்தை கடக்கும் வல்லமையும் மற்றும் Tri Motor AWD வேரியன்ட் 800Km ரேஞ்சும் 2.9 வினாடிகளில் 96Km வேகத்தை கடக்கும் வல்லமையும் கொண்டது. 

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விரைவில் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.