ரஸ்யாவில் வெளிப்படுத்தப்பட்டது புதிய தலைமுறை 2020 ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2020 ஆம் ஆண்டு ரேபிட் மாடலை ரஸ்யாவில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இந்த மாடலின் வடிவமைப்பு முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதியதலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் MQB A0 எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் MQB A0-IN எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாம் தலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் வெளிப்புறத்தில் ஆக்டேவியா மாடலின் வடிவமைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய ஆக்டேவியா மாடல் போன்ற தோற்றத்தை தான் தருகிறது. இந்த மாடலின் உட்புற வடிவமைப்பும் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் மல்டி கலர் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் ரஸ்யாவில் 1.6 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இந்த மாடல் இந்தியாவில் 1.0-litre டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சிறிய டீசல் எஞ்சின் தேர்வுகளை நிறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.