புதிய மஹிந்திரா தார் ஹம்மர் கஷ்டம் கான்செப்டை வெளியிட்டது DC

இந்தியாவை சேர்ந்த DC டிசைன் நிறுவனம் மஹிந்திரா தார் மாடலின் ஹம்மர் எனும் புதிய கஸ்டமைசேஷன் கான்செப்டை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த கஸ்டமைசேஷன் கான்செப்ட் வெறும் 300  எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் எனவும் ரூ 5.95 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் எனவும் DC டிசைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DC டிசைன் நிறுவனம் வெளிப்புறத்தில் புதிய மூடிய மேற்க்கூரை, LED விளக்குகள், புதிய பம்பர் என ஏராளமான மாற்றங்களை செய்துள்ளது. வெளிப்புறத்தை விட உட்புறத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளது DC. புதிய சிவப்பு நிற லெதர் இருக்கை கவர், LED விளக்குகள், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம்  மற்றும்  மர வேலைப்பாடுகளுடன் சிவப்பு நிறத்தில் ஒரு பிரீமியம் கார் போன்ற தோற்றத்தை தருகிறது. 

எஞ்சின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றங்களும் கிடையாது.  DC டிசைன் நிறுவனத்தின் இந்த புதிய தார் ஹம்மர் கஸ்டமைசேஷன் கான்செப்ட் எப்படி உள்ளது என்பது தொடர்பான உங்கள் கருத்தை கீழே தெரிவியுங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.