ஹூண்டாய் ஜெனெசிஸ் எசென்டியா கான்செப்ட் மாடலின் படங்கள்

ஹுண்டாய் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான  ஜெனெசிஸ், எசென்டியா கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு நியூ யார்க் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹுண்டாய் நிறுவனம் தனது  சொகுசு கார்களை ஜெனெசிஸ் பிராண்டில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த மாடல் நான்கு பேர் அமரக்கூடிய ஒரு எலெக்ட்ரிக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனெசிஸ் எசென்டியா கான்செப்ட் மாடல் டபுள்-பபுள் ரூப் அமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் எலெக்ட்ரிக் மோட்டார் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் கான்செப்ட் மாடல் என்பதால் தயாரிப்பு நிலை மாடலில் சில மாற்றங்களை காண முடியும்.

மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.