புதிய டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் SUV மாடலின் படங்கள்

இறுதியாக, டொயோட்டா நிறுவனம் ரைஸ் காம்பேக்ட் SUV மாடலை அதிகாரப்பூர்வமாக ஜப்பானில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் நன்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் ஒரே ஒரு எஞ்சின் தேர்வில் நான்கு வித வேரியன்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை விட்டாரா ப்ரீஸா மாடலை இந்தியாவில் மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள்  பகிர்ந்து கொள்ளும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் SUV மாடல் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த மாடல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் SUV மாடல் டைஹாட்சு நிறுவனத்தில் புத்தம் புதிய Daihatsu New Global Architecture (DNGA) எனும் பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 3,995mm நீளமும், 1,695mm அகலமும், 1,620mm உயரமும் மற்றும் 2525 mm வீல் பேஸும் கொண்டது. மேலும் இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சிறப்பான தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், 17 இன்ச் அலாய் வீல், அடிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங், இரட்டை வண்ணம் ஆகியவையும் உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீல் கட்டுப்பாடுகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் குரூஸ் கன்ட்ரோல், கொலிசன் வார்னிங், கிராஷ் அவாய்டன்ஸ் வார்னிங், பிரேக்கிங் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் SUV மாடல் 1.0-litre மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 98bhp திறனும் 140Nm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஒரே ஒரு CVT (D-CVT) டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.