யமஹா XSR155 ரெட்ரோ மோட்டார் சைக்கிள் மாடலின் படங்கள்

யமஹா நிறுவனம் ரெட்ரோ வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட XSR155 மாடலை தாய்லாந்தில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தான் யமஹா நிறுவனத்தின் ஹெரிடேஜ் மாடல்களில் மிகச்சிறிய எஞ்சின் கொண்ட மாடல் ஆகும். மேலும் இந்த மாடல் MT-15 மற்றும் YZF-R15 V3.0 மாடல்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. XSR155 மாடல் இந்திய மதிப்பில் ரூ 2.1 லட்சம் விலையில் தாய்லாந்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் MT-15 மற்றும் YZF-R15 V3.0 மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

XSR155 மாடல் சிறப்பான ரெட்ரோ வடிவமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என நிறைய பழமையான வடிவமைப்புகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், ABS என ஏராளமான புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் MT-15 மற்றும் YZF-R15 V3.0 மாடல்களில் உள்ள அதே அதே 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போது கிளாசிக் மற்றும் ரெட்ரோ மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  MT-15 மற்றும் YZF-R15 V3.0 மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருப்பதால் இந்த மாடலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.