இந்தியாவின் முதல் AI எலெக்ட்ரிக் மோட்டார் பைக் ரிவோல்ட் RV400

ரிவோல்ட் இன்டெல்லி கார்ப் எனும் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார் பைக் மாடலான RV400 மாடலை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தியது. இதன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் இந்த மாடல் அடுத்த மாதம் 22 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த மாடல் முதலில் டெல்லியில் வெளியிடப்படும் அதை தொடர்ந்து பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் தோராயமாக ரூ 1 லட்சம் விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் நேக்ட் பைக் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், LED முகப்பு, பின்புற மற்றும் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆர்டிபிசியால் சத்தமும் கொடுக்கப்பட்டுள்ளது, இதை இந்த மடலுக்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக மொபைல் ஆப் மூலம் மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த ஆப் மூலம் உங்கள பைக்கை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் தொழில்நுட்ப விவரங்களை ரிவோல்ட் நிறுவனம் வெளியிடவில்லை, எனினும் இந்த மாடல் 156km ரேஞ் கொண்டது எனவும் அதிகபட்சமாக மணிக்கு 85km வரை செல்லும் எனவும் ரிவோல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடலில் எடை குறைவான லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி சார்ஜ் ஆகா நான்கு மணி நேரம் ஆகும். உங்கள் பைக்கின் பேட்டரி செல்லும் வழியில் எங்கேயாவது தீர்ந்து விட்டால் அருகில் உள்ள Mobile Revolt battery swap station-க்கு சென்று நீங்கள் பேட்டரியை ஸ்வாப் செய்து கொள்ளலாம். இந்த மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.