டாடா அல்ட்ராஸ், அல்ட்ராஸ் EV, பஸ்ஸார்டு மற்றும் H2X கான்செப்ட் மாடலின் படங்கள்

டாடா நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச், ஹாரியர் மாடலின் அடிப்படையிலான ஏழு இருக்கை கொண்ட பஸ்ஸார்டு மற்றும் H2X மினி SUV  கான்செப்ட் என மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா அல்ட்ராஸ்:
இதன் கான்செப்ட் மாடல் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இம்பேக்ட் 2.0 டிசைன் தத்பரியத்தில் தான் H5X SUV கான்செப்ட் மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா 45X கான்செப்ட் மாடல் வெளிப்புறத்தில் ஒரு பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் டாடா நிறுவனத்தின் புதிய ALFA (Agile Light Flexible Advanced) பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் அல்பட்ராஸ் எனும் கடல் பறவையின் பெயரை அடிப்படையாக கொண்டு இந்த பெயரை உருவாக்கியுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது ஜூரிப்பிடத்தக்கது. இந்த மாடல் வெளியிடப்படும் போது பிரீமியம் ஹேட்ச் செக்மென்ட்டில் மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் EV:

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் அல்ட்ராஸ் EV மாடலையும் 2019 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250km முதல் 300km வரை செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

டாடா பஸ்ஸார்டு:
இந்த மாடல் டாடா ஹாரியர் மாடலின் அடிப்படையிலான ஏழு இருக்கை கொண்ட மாடல் ஆகும். இந்த மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் டாடா ஹாரியர் மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் D8 ஆர்கிடெக்ச்சர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் இதன் பின்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹாரியர் எனும் பெயரில் அல்லாமல் புதிய பெயரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் செயல்திறன் மேம்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

டாடா H2X மினி SUV:
இதன் தயாரிப்பு நிலை மாடல் 2020 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் அல்ட்ராஸ் மாடல் தயாரிக்கப்பட்டுள்ள அதே ALFA (Agile Light Flexible Advanced) பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஹார்ன்பில் என அழைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஆரம்ப நிலை SUV மாடலாக இருந்தாலும் சிறப்பான SUV  போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் டியாகோ மற்றும் டிகோர் மாடலில் உள்ள எஞ்சின் தேர்வில் நெக்ஸன் மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்படும். 

மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.